அறுகம் குடா தாக்குதல் திட்டம்: கொழும்பில் சிக்கிய மாலைதீவு பிரஜை

இலங்கையில் நடத்தப்படவிருந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உதவியாக செயற்பட்ட மாலைதீவு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்கிஸ்ஸை - தெஹிவல சிறிபால வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் 

இந்த நிலையில், 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், தீவிரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.