ஹமாஸ் தலைவருக்கும், இஸ்ரேலிய பிரதமருக்கும் பிடியாணை



போர் குற்றச்சாட்டுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் காசாவின் ஹமாஸ் தலைவர் யெஹ்யா சின்வார் மீது பிடியாணை பிறப்பிப்பதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குத்தொடுநர்  விண்ணப்பித்துள்ளார்.

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் போர் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இந்த இருவரும் பொறுப்புக் கூறுவதற்கான நியாயமான பின்னணிகள் இருப்பதாக தலைமை வழக்குத்தொடுநரான கரீம் கான் குறிப்பிட்டுள்ளார்.


இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் மற்றும் ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மைல் ஹனியே மற்றும் ஹமாஸ் ஆயுதப் பிரிவுத் தலைவர் முகமது தயிப் அகியோரும் தேடப்படுவோரில் உள்ளக்கப்பட்டுள்ளனர். ஹேகை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் இஸ்ரேலின் செயற்பாடுகள் தொடர்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருவதோடு அண்மைக் காலத்தில் அது ஹமாஸ் தொடர்பிலும் விசாரணை நடத்துகிறது.