கோவில் சிலையை திருடிய இராணுவ சிப்பாய் - தமிழர் பகுதியில் சம்பவம்!


வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் நடராஜர் சிலையை திருடியதாக கூறப்படும் இராணுவ வீரர் ஒருவரை வவுனியா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த இராணுவ சிப்பாய் சிலையைத் திருடி எடுத்துச் செல்லும்போது வாகன சாரதிகள் குழுவொன்றினால் பிடிக்கப்பட்டு தலைமையக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிலையை விற்பதற்காக கொண்டும் செல்லும் போதே அவர் சிக்கியுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அக்கராயன்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றும் 21 வயதுடைய இராணுவ சிப்பாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திருடப்பட்ட சிலையின் மதிப்பு 55,000 ரூபாய் என கோவிலின் பூசாரி காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.