கலவரபூமியாக மாறிய ஆர்ஜென்டினா! மாற்றப்பட்ட வீரர்களின் பயணப்பாதை:நடந்தது என்ன


கால்பந்து உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜென்டினா அணியை நேற்று சொந்த நாட்டிற்கு வரவேற்கத் தயார் செய்யப்பட்ட அணிவகுப்பை ஏற்பாட்டாளர்கள் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கால்பந்து சங்கத்தின் தலைமையகத்திற்கு சென்று கொண்டிருந்த சிறப்பு பேருந்தில் பார்வையாளர்கள் சிலர் குதித்தள்ளனர்.

இதன் காரணமாக கால்பந்து உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜென்டினா அணிக்கான வரவேற்பு அணிவகுப்பை ஏற்பாட்டாளர்கள் நிறுத்தியுள்ளனர்.

ஆர்ஜென்டினா அணியின் வெற்றியால் உற்சாகமடைந்த பார்வையாளர்கள் சிலர், மேம்பாலத்தில் இருந்து ஆர்ஜென்டினா கால்பந்து அணி பயணித்த பேருந்தின் மேல் குதித்துள்ளனர்.

இதேவேளை சில சமயங்களில் பார்வையாளர்கள் பாலங்களில் இருந்து விழுந்து காயமடைந்ததாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

36 ஆண்டுகளுக்குப் பிறகு லியோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா கால்பந்து அணியை வரவேற்கும் வகையில் ஆர்ஜென்டினாவுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் குழு ஒன்று கூடியுள்ளதுடன் அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான உலக சாம்பியனான ஆர்ஜென்டினா கால்பந்து அணியை அணிவகுப்பில் இருந்து அகற்றி விமானம் மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனிடையே, தனது அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் வீட்டின் மாடியில் ஓடிக்கொண்டிருந்த இளைஞன் விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

பல்வேறு சம்பவங்களால் 5 வயது குழந்தை உட்பட 5 பேர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிடையில், வெற்றியால் பரவசமடைந்த ஆர்ஜென்டினா பார்வையாளர்களை தலைநகர் பியூனஸ் அயர்ஸின் தெருக்களில் இருந்து அகற்றுவதற்கு கலக எதிர்ப்பு பொலிஸ் பிரிவுகளை அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தலைநகரில்பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.