கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்வர்களுக்கு பக்க விளைவு ஏற்படுமா? : பயோடெக் நிறுவனம் விளக்கம்



கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியில் இரத்த உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடையே அச்சம் ஏற்பட்டது.

இந்த அச்சத்தை போக்கும் வகையில், கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் இரத்த உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 வாக்சின் தடுப்பூசியில் இரத்த உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.


கோவாக்சின் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றிய விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.


இந்த ஆய்வுகளின் முடிவுகள், கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி என்பதை உறுதிப்படுத்துகின்றன.


கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட லட்சக்கணக்கான மக்கள் எந்தவித பக்க விளைவுகளையும் அனுபவிக்கவில்லை.


கோவாக்சின் 81மூ செயல்திறன் கொண்டது மற்றும் பல்வேறு மருத்துவ சோதனைகளில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு லேசான பக்க விளைவுகள் ஏற்படலாம் என்றாலும், அவை தற்காலிகமானவை மற்றும் சிகிச்சைக்கு உட்பட்டவை.

கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.


10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வீணானதாகவும், அதனால் இந்தியாவுக்கு ரூ.1,047 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


கோவிஷீல்டு தடுப்பூசியால் டி.டி.எஸ். (Thrombocytopenia with Thrombosis Syndrome) என்ற அரிய நோய் ஏற்படலாம் என்று ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.


சமீப காலங்களில், இளம் வயதினரிடையே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. ஆனால், இது தடுப்பூசியால் ஏற்பட்டதா என்பது குறித்து உறுதியான ஆதாரங்கள் இல்லை.

--