மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கின்றனவா சீனா, ரஷ்யா? : சர்வதேச எல்லையில் பதற்றம்


அண்மையில் ரஷ்யா  மற்றும் சீனாவின்  போர் விமானங்கள் ஒன்றிணைந்து சர்வதேச எல்லையில் நடத்திய போர் பயிற்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன், போர் பதற்றங்கள் ஏதும் நடந்தால் அதனை கட்டுபடுத்த அமெரிக்க மற்றும் கனேடிய போர் விமானங்கள் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

எனினும், ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் இணைந்து சர்வதேச எல்லையில் நடத்திய போர் பயிற்சிகளால் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை என அமெரிக்கா  தெரிவித்துள்ளது.

 
 இது தொடர்பில் பக்கிங்காம் பல்கலை அரசியல் துறை பேராசிரியரான அந்தோனி கிளஸ் கருத்து தெரிவிக்கையில்,
 ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் இணைந்து சர்வதேச எல்லையான பெரிங் கடல் பரப்பில் குண்டு வீசும் திறன்கொண்ட போர் விமானங்களைக் கொண்டு போர் ஒத்திகை நடத்தியது, முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்றார்
 
இதேவேளை, நாஸி ஜேர்மனியும் ஏகாதிபத்திய ஜப்பானும் இரண்டாம் உலகப்போரில் கைகோர்த்தன. அதேபோன்றதொரு உறவை ரஷ்யாவும் சீனாவும் உருவாக்கியுள்ளன.

 ஆக, அவர்கள் உலகை மூன்றாம் உலகப்போரை நோக்கி தள்ளக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.