ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது.
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனையை முன்னிட்டு இவ்வாறு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை ஏப்ரல் 26 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசரின் இறுதிக்கிரிகைகளில் பங்கேற்பற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் நாளை வத்திக்கான் செல்லவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இரங்கல் செய்தியுடன் வத்திக்கான் செல்லவுள்ள அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை மக்கள் சார்கில் பாப்பரசரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்.