எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழ் செல்லும் அனுர

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் ஆசிரியர்களின் அபிமானமிகு வடமாகாண மாநாடு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட வங்கி மற்றும் நிதி அமைப்பின் மாநாடு ஆகிய இரு நிகழ்வுகளில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கவுள்ளார்.

குறித்த மாநாடானது, நாளைய தினம் (04.04.2024) இடம்பெறவுள்ளது.


அதன் முதல் நிகழ்வாக ஆசிரியர்களின் அபிமானமிகு வடமாகாண மாநாடு பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டல் சங்கிலியன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

“இழக்கப்படுகின்ற கல்வி உரிமைகளை வென்றெடுப்போம்! ஆசிரியர் - மாணவர்களின் உரிமைகளை வென்றெடுப்பது எப்படி?” எனும் கருப்பொருளில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மாநாட்டில் அச்சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க மற்றும் தேசிய அமைப்பாளர் தோழர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்

அதனையடுத்து யாழ்ப்பாண மாவட்ட வங்கி மற்றும் நிதி அமைப்பின் மாநாடு பிற்பகல் 6.30 மணிக்கு ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் வசந்த சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர்,வங்கி மற்றும் நிதி அமைப்பின் உறுப்பினர்களான தோழர் சமீர அல்விஸ், தோழர் சதானந்தம் நேசராஜன் மற்றும் தோழர் பூலோகராஜா சிறிதரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.