மனிதர்களை தாக்கப்போகும் இன்னொரு பேரழிவு..! உலகளாவிய அச்சுறுத்தல்



மனிதர்களுக்கு தொற்றும் பறவை காய்ச்சல் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது .

பறவைக் காய்ச்சலில் மனித மாறுபாட்டின் சாத்தியம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பறவைகளில் இருந்து பாலூட்டும் விலங்குகளுக்கு தொற்று பரவியுள்ள நிலையிலேயே உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதுவரை பறவை காய்ச்சல் பறவைகளில் மட்டும் காணப்பட்டுள்ள நிலையில், தற்போது நீர்நாய்கள், நரிகள் மற்றும் மிங்க் ஆகியவற்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மனிதர்களைப் பாதிக்கும் வாய்ப்பு மிக அருகாமையில் இருப்பதாக கூறி, நடவடிக்கை எடுக்க உலக சுகாதார அமைப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளது.

மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புகள் மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை முன்னெடுக்க நாடுகள் தயாராக வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு கேட்டுகொண்டுள்ளது.

பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றாலும், இந்த விவகாரத்தில் நாடுகள் மெத்தனமாக செயல்பட வேண்டாம் எனவும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

பறவை காய்ச்சல் பாதிப்பு முன்னர் மனிதர்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனால் பெரும் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. தற்போது பாலூட்டிகளில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது நிபுணர்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம் என்ற அச்சமும் நிபுணர்களிடையே எழுந்துள்ளது.

அமெரிக்காவில் தான் முன்னர் பறவை காய்ச்சல் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. பிரித்தானியாவும் லேசான பாதிப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.