சிவகார்த்திகேயன் படத்தில் அனிதா சம்பத்

டிவி சேனல் ஒன்றில் வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலம் ஆனவர் அனிதா சம்பத். அதுக்கு பிறகு பிக் பாஸ் ஜோடிகள் என்கின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷாரிக்குடன்  இணைந்து டைட் டிலையும் தட்டி சென்றார். தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புக்காக காத்து கொண்டிருப்பதால் சீரியல் வாய்ப்புக்களை அவர் தவிர்த்து வருகிறார். இந்நிலையில் முக்கியமான வேடத்தில் அனிதா சம்பத்  நடிக்கின்றார்  என தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்துவது போல்  சிவகார்த்திகேயனுடன் அனிதா எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.