கடந்த 10 ஆண்டுகளாக ரஜினி,கமல் ,விஜய்,அஜித் ,தனுஷ்,சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த அனிருத் இதுவரை 24 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இந்நிலையில் அவரது 25 ஆவது படமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,நயன்தாரா,சமந்தா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் வெளியாகவுள்ளது. பத்து ஆண்டுகளில் அனிருத் இசையமைத்த படங்களில் 8 சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.தற்போது அனிருத் இசையமைத்துள்ள 25 ஆவது படமாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தயாரித்துள்ள ரவுடி பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதோடு 10 ஆண்டுகளில் 25 திரைப்படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள அனிருத்த்துக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            