அந்தமான் கடல் பகுதியில் புயல் அறிகுறி- மீனவர்களுக்கு எச்சரிக்கை!

அந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்,  மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், ”அந்தமான் கடல் பகுதியில் உருவாகி வரும் புயல் காரணமாக மணிக்கு 75 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.  இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.  இடையிடையே மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின்  ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.