மத்தியதரைக்கடலில் பாரிய விபத்தை சந்தித்த அமெரிக்கா : முழுமையான தகவலை வெளியிட மறுப்பு

கிழக்கு மத்தியதரைக் கடலில் அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஐந்து அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

வழக்கமான பயிற்சியின் ஒரு பகுதியாக எரிபொருள் நிரப்பும் போது விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெலிகொப்படர் எங்கிருந்து பறந்தது அல்லது விபத்து நடந்த இடம் குறித்து இராணுவம் எதனையும் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ{க்கும் இடையே மோதல் வெடித்ததில் இருந்து கிழக்கு மத்தியதரைக் கடலில் அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

 இரண்டு விமானம் தாங்கி கப்பல்களையும், கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களையும் கடந்த ஒரு மாதமாக கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு நகர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.