கொரோனா குறித்து இன்னும் நேர்மையாக இருக்குமாறு சீனாவுக்கு அமெரிக்கா அழைப்பு!

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பது தொடர்பில் இன்னும் நேர்மையாக இருக்குமாறு சீனாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ் அந்நாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.வுஹானில் உள்ள ஆய்வக கசிவிலிருந்து தொற்றுநோய் தொடங்கியதாக ஒரு கூட்டாட்சி நிறுவனம் கண்டறிந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்த ஒரு நாள் கழித்து அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

அமெரிக்க வர்த்தக சபை நிகழ்வில், கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ் இந்த கருத்தை வெளியிட்டார்.உலகளாவிய தொற்றின் தோற்றம் அறிவியலைப் பற்றியது மற்றும் அரசியலாக்கப்படக்கூடாது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.

இந்த மாதம் சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.அமெரிக்க எரிசக்தித் துறையின் அறிக்கையானது ஒரு இரகசிய உளவுத்துறை அறிக்கையில், குறைந்த நம்பிக்கையுடன் வைரஸ் தற்செயலாக சீனாவின் ஒரு ஆய்வகத்தால் கசிந்ததாக முடிவு செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வைரஸ் எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்று எரிசக்தி துறை முன்பு கூறியது.

மற்ற அமெரிக்க முகவரங்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் மாறுபட்ட அளவு நம்பிக்கையுடன் மாறுபட்ட முடிவுகளை எடுத்துள்ளன. வுஹானின் ஹூவானன் கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்று மற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன.