தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை, எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த பணத்தினை தனது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தி மோசடி செய்ததாக அவருக்கு எதிராக பணம் வழங்கிய புலம்பெயர் தமிழர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் நீதிபதி தர்ஷினி தலைமையில் நேற்று எடுத்துகொள்ளப்பட்டது.
இந்நிலையிலேயே குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலீடுகளை செய்ய முனையும் புலம்பெயர் தமிழர்களை இவ்வாறு ஏமாற்றி மோசடி செய்வது எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்பவர்களை அச்சமடைய செய்யும் என குறித்த வழக்கினை தாக்கல்செய்த புலம்பெயர் தொழிலதிபரான கிறிஸ்டி குணரெட்னம் தெரிவித்தார்.