விஜய்க்கு வில்லனாகும் அஜித் பட வில்லன்!

நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சியின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.தில் ராஜு தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது.இந்த படம் நகைச்சுவை  கலந்த குடும்ப சென்டிமென்ட்டில் உருவாகவுள்ளதாகவும், இதில்  விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.அதேநேரம்  அஜித்தின் விவேகம்.  மோகன்லாலின் லூசிபர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த பொலிவுட் நடிகரான விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.