விக்னேஷ் சிவனை புகழும் அஜித் ரசிகர்கள்

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை  படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக ஹுமா குரேஷா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். வலிமை படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர் பார்ப்பு நிலவி வருகின்றது. இப்படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 13 ஆம் திகதி வெளியிடவுள்ளனர். இந்த படத்திலிருந்து வெளியான வேற மாறி பாடலும் , அம்மா சேட்டிமெண்ட் பாடலும் பெரிய ஹிட்  ஆனது. எந்த இரண்டு பாடல்களையும் எழுதியது பிரபல இயக்குனரான  விக்னேஷ் சிவன். இவர் எழுதிய பாடல்களுக்கு எந்த சம்பளமும் வாங்கவில்லை என இயக்குனர் வினோத் சமீபத்தில் கூறியுள்ளார். இந்த தகவல் அறிந்த அஜித் ரசிகர்கள் விக்னேஷ் சிவனை பாராட்டி வருகின்றனர்.