அஜித்துக்கு ஏற்பட்ட விபத்து….இயக்குனர் எச் வினோத் தகவல்!

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் மேக்கிங் காட்சிகள் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் அஜித்துக்கு விபத்து ஏற்பட்ட காட்சி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் வினோத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

இந்த படத்தின் சேஸிங் காட்சிகள் எடுப்பது அவ்வளவு சுலபமாக எங்களுக்கு இருக்கவில்லை. மிகவும் கவனமாக எடுத்தோம். இந்த படத்தின் சேஸிங் காட்சியை எடுக்க புனே அருகில் உள்ள சோலாபூர், ஹைதராபாத், லக்னோ உள்ளிட்ட பல பகுதிகளில் நாங்கள் திட்டமிட்டிருந்தாலும், அங்கெல்லாம் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

கடைசியில் சென்னை அருகே மீஞ்சூர் என்ற பகுதிகளில் தான் எங்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தது. அதனை அடுத்து அந்த சாலையில் சேஸிங் காட்சியை எடுத்தோம். சேஸிங் காட்சியை எடுக்கும் போது அஜித்துக்கு விபத்து ஏற்பட்டதற்கு காரணம், அந்த சாலை முடிக்கப்படாமல் மண் நிறைந்த சாலையால் இருந்தது தான்’ என்றும் கூறினார்.

மேலும் அஜித்தை பாதுகாப்பது போலவே அவர் பயன்படுத்திய பைக்கையும் நாங்கள் பாதுகாத்தோம். இத்தாலி நாட்டைச் சேர்ந்த அந்த பைக் மிகவும் விலை உயர்ந்தது. இண்டிகேட்டர் உடைந்தால் கூட 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்பதால் அதனை மிகுந்த கவனத்துடன் எங்கள் படக்குழுவினர் பார்த்துக்கொண்டார்கள் என்று ஹெச். வினோத அந்த பேட்டியில் கூறியுள்ளார்.