கனடாவின் ஏர்-கனடா (Air Canada) விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் செயின்ட் ஜான்ஸில் இருந்து ஹாலிஃபாக்ஸுக்கு 80 பயணிகளுடன் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஏர் கனடா விமானம் கியர் செயலிழப்பால் ஆபத்தான முறையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ஓடுதளத்தில் உரசி திடீரென தீ
அப்போது, விமானத்தின் இறக்கை ஓடுதளத்தில் உரசி திடீரென தீப்பிடித்ததுள்ளது.
எனினும் அதிஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஹாலிஃபாக்ஸ் ஸ்டான்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் கோர விபத்துக்குள்ளான விமானம்
இதேவேளை தென் கொரியாவின் (South Korea) முவான் விமான நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
181 பேர் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானம் விபத்துக்குள்ளானது.
தரையிறங்கும் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானது.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்து
அத்துடன் 38 பேரின் உயிர்கள் பலியான அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்துக்கு ரஷ்யா காரணமாக இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அஜர்பைஜான் எயார்லைன்ஸ் விமான விபத்திற்கு ரஷ்யா தான் பொறுப்பு என்று கூறாமல், அஜர்பைஜான் ஜனாதிபதியிடம், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) மன்னிப்பு கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் உக்ரேனிய ட்ரோன்களை விரட்டியபோது இந்த சோகமான சம்பவம் இடம்பெற்று விட்டதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுடன் புடின் தொலைபேசியில் பேசிய போது குறித்த விடயங்களை கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.