சீனாவில் செயற்கை நுண்ணறிவியல் தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ இயந்திரம் ஒன்று திடீரென பொதுமக்களை தாக்கியுள்ளது.
இதன்போது, அங்குள்ள அதிகாரிகள் அதனை உடனியாக தடுத்துள்ள போதிலும் அங்கு பரபரப்பான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் பதிவான காணொளியும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மென்பொருள் கோளாறே இந்த ஒழுங்கற்ற நடத்தைக்குக் காரணம் என்று அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் இதனால் எந்தவொரு திட்டமிட்ட தீங்கும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலு தற்போது தொழில்நுட்ப புரட்சிகள் குறித்து பேசப்பட்டு வரும் சூழலில் AI குறித்த பாதுகாப்பு அச்சுறுத்தலை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பலவும் கரிசனை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.