திருநங்கையாக நடித்த வாணி கபூர் குவியும் பாராட்டுக்கள்

ஆஹா கல்யாணம்,வார் போன்ற பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் வாணி கபூர். இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர். இந்நிலையில் அவர் நடித்த சண்டிகர் கரே ஆஷிகி படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இப்படத்துக்கு இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆயுஸ்மான் குரானா நடித்திருந்தார்.இந்த படத்தில் நடித்ததை பற்றி அவர் கூறியதாவது என்னை நம்பி கொடுக்கும் கதாபாத்திரத்தில் என்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று நான் நிருபித்து இருக்கிறேன். இனி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்னை நம்புவார்கள்.