ராய் லக்சுமிக்கு கோல்டன் விசா

அமீரகத்தில் வசிக்க விரும்பும்வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள் , திரைபிரபலங்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில்  கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது.இந்த விசாவானது புதுப்பித்து கொள்ளும் வசதி கொண்டது. ஏற்கனவே  நடிகர்கள் ஷாருக்கான்,மம்முட்டி, டொவினோ, தாமஸ் சானியா மிர்சா, பிருத்விராஜ் துல்கர் சல்மான் ஆகியோற்கும் கோல்டன் விசா வழங்கியது. அமீரக அரசு  தற்போது பிரபல நடிகை ராய் லக்சுமிக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது.