நடிகர் விக்ரம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக உடலை வருத்தி எடையை குறைத்தும், ஏற்றியும் அதற்கு புதிய வடிவத்தில் உயிர் கொடுப்பவர். சில மாதங்களுக்கு முன்பு வெளியான மகான் திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.இந்த நிலையில் நடிகர் விக்ரம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டதாக அவரது மக்கள் தொடர்பு அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். விக்ரம் விரைந்து உடல்நலம் பெற்று வர வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்