சொந்த ஊரில் பிரம்மாண்டமாக நடிகர் விஜயகுமார் கட்டியுள்ள வீடு- தனக்கு தானே சிலை வைத்துள்ள நடிகர், புகைப்படம் இதோ


தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திர குடும்பமாக வாழ்ந்து வருபவர்கள் தான் விஜயகுமார் குடும்பம்.

1961ம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து கலக்கி வந்தவர் தான் விஜயகுமார்.

400 படங்களுக்கு மேல் நடித்துள்ள விஜயகுமார் சின்னத்திரையிலும் சீரியல்கள் நடித்துள்ளார். இவருடைய மகன் அருண்குமாரும் இப்போது நிறைய ஹிட் படங்கள் கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள், 5 பெண்கள் பிள்ளைகள் மற்றும் 1 மகன் இருக்கிறார.

விஜயகுமார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது குடும்பத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் இருக்கும் தனது சொந்த வீட்டிற்கு செல்வாராம்.

தனது பெரிய குடும்பத்திற்காக சொந்த வீட்டில் 10க்கும் மேற்பட்ட பெட்ரூம்கள் வைத்து கட்டியுள்ளாராம். அதோடு அந்த வீட்டில் தனது மனைவிகளுடன் இருப்பது போல் ஒரு சிலையும், தனது தாய்-தந்தைக்கு ஒரு சிலையும் வைத்து கட்டியுள்ளாராம்.