சிம்புக்கு டாக்டர் பட்டம்

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர், இயக்குனர், பாடகர், பாடலசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார். மாநாடு படத்துக்கு பிறகு பல புதியப்படங்களில் நடித்து வருகிறார்.கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் கவுரவ பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சிம்புவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் வருகின்ற ஜனவரி 11 ஆம் திகதி  கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பிக்க இருக்கின்றது. இச்செய்தியை சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வைரலாகி வருகின்றனர்.