மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் இல்லத்தில் நடிகர் அஜித் !

கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித் ராஜ்குமார் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.இதனிடையே தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்களும் அவரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறி வந்தனர். அந்த வகையில் கமல், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் அவரின் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.மேலும் தற்போது நடிகர் அஜித் பெங்களூரில் உள்ள நடிகர் புனீத் ராஜ்குமாரின் இல்லத்திற்கு சமீபத்தில் சென்றதாக ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.ஆனால் அந்த புகைப்படம் நேர்கொண்ட பார்வை படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது