மைக் மோகன் படத்தின் பெயர் அறிவிப்பு

1977 ஆம் ஆண்டு கமல் நடிந்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மோகன். பின்னர் கதாநாயகனாகவும் உயர்ந்தார். 1980-90 களில் தமிழ் சினிமாவில் இவருக்கு என்று தனி இடம்உள்ளது. இவர் நீண்டகாலமாக படம் நடிக்காமலே இருந்தார். இப்போது விஜய் ஸ்ரீஜி இயக்கும் படத்தில் ரீ என்ட்ரியாக மோகன் நடிக்கின்றார். இப்படத்தின் பெயர் ஹரா என அறிவிக்கப்பட்டுள்ளது. மோகனை பல்வேறு கதாப்பாத்திரத்தில் பார்த்து ரசித்த ரசிகர்கள் ஹரா  படத்திலும் அவரது கதாப்பாத்திரம் மிகவும் பரவலாக பேசப்படும் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தை கோவை  எஸ் பி மோகன் ராஜ் மற்றும்  விஜய் ஸ்ரீஜி இணைந்து தயாரிக்கின்றனர் என கூறப்படுகின்றது.