விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கோபமடைந்த நடிகர் கார்த்தி!

விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் ஆராவாரத்திற்கு நடிகர் கார்த்தி கோபமடைந்தார்.விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது.

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள விருமன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். கொம்பன் படத்துக்கு பிறகு கார்த்தி மற்றும் இயக்குநர் முத்தையா இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.மதுரை ராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி, சூர்யா, இயக்குநர்கள் ஷங்கர், பாரதி ராஜா, முத்தையா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த விழாவில் நடிகர் சூர்யாவின் வருகையையொட்டி ரசிகர்கள் அரங்கில் ஆராவாரம் செய்தபடியே இருந்தனர். பாரதிராஜா, ஷங்கர், அதிதி என பலரும் மேடையேறி பேசிய போது ரசிகர்கள் நடிகர் சூர்யாவை குறிப்பிட்டு ரோலக்ஸ் ரோலக்ஸ் என கத்தியபடி இருந்தனர்.தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசியபோது ரசிகர்கள் அரங்கில் விசிலடித்தபடியும், ஆராவாரம் செய்தபடி இருந்தனர். இதனால் இடையில் கோபமடைந்த நடிகர் கார்த்தி, “யோவ்...கத்திகிட்டே இருக்கீங்களே..வாய் வலிக்காதா?” எனக் கத்தினார்.எனினும் தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து உரையாடினார். விருமன் திரைப்படத்தின் வெற்றிக்கு ஆதரவு கோரிய நடிகர் கார்த்தி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.