200 தொழிற்சங்கங்களின் நடவடிக்கையால் அரச சேவைகள் ஸ்தம்பிதம்

 அடிப்படை வேதனத்தை இருபதாயிரம் ரூபாவினால் அதிகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி அரச சேவையைச் சேர்ந்த 200 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச மற்றும் மாகாண அரச சேவைகள் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அந்த ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சந்தன சூரியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக நாடளாவிய ரீதியில் அரச துறையின் பல சேவைகள் ஸ்தம்பிதமாகியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.