மண்ணெண்ணெய்யை குடித்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலி : யாழில் அதிர்ச்சி சம்பவம்


யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

தாய் சமைத்துக்கொண்டிருந்த போது சமயலையில் விளையாடிக்கொண்டிருந்து குழந்தை, போத்தலில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து குடித்துள்ளது.

சிறிது நேரத்தில் குழந்தை மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, தாய் குழந்தையை யாழ்ப்பாணம் போதனா  மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இதனையடுத்து குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.