கனேடிய பிரஜை ஒருவருக்கு அடுத்தடுத்து கிடைத்த தொடர் அதிர்ஷ்டம்!


கனடாவின் ஒன்றாரியோ மாகாண மேபெல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓராண்டு கால இடைவெளியில் இரண்டு தடவைகள் லொட்டரி மூலம் அதிக பணத்தை வென்றுள்ளார்.

மேபெல் பகுதியைச் சேர்ந்த கிளென் ஹாப்பர் என்ற நபர் மோட்டார் தொழில்நுட்ப பணியாளரான கடமையாற்றி வருகிறார்

கடந்த ஆண்டு ஒரு லட்சம் டொலர் பரிசு வென்றுள்ள அதேவேளை இந்த ஆண்டு நான்கு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் டொலர் பரிசை வென்றுள்ளார்.

பரிசுத் தொகையை பார்த்தபோது தாம் நான்காயிரம் டொலர்கள் பரிசு வென்றுள்ளதாகவே கருதியதாகவும் பின்னர் சரியாக பார்த்தபோது நான்கு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் டொலர்கள் பரிசு வென்றது தெரியவந்தது என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றெடுக்க கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரிசுத் தொகையைக் கொண்டு தாம் ஓய்வூதத்திற்கான சேமிப்புக்களை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஃப்ளோரிடா மற்றும் நியூ பவுண்ட்லேண்ட் ஆகிய பகுதிகளுக்கு விடுமுறையை கழிப்பதற்காக பயணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.