புத்தாண்டில் அஜித், விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சிறப்பு விருந்து!

2022 ஆம் ஆண்டின் புத்தாண்டு இன்னும் ஒரு வாரத்தில் வரவிருக்கும் நிலையில் அந்த தினத்தில் அஜித் மற்றும் விஜய் ஆகிய இரு தரப்பு ரசிகர்களுக்கும் சிறப்பான விருந்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. அதேபோல் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளது என்பதும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் சிங்கிள் பாடலின் புரமோ வீடியோ வரும் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியது. அதேபோல் அஜித்தின் ’வலிமை’ படத்தின் டிரைலரும் புத்தாண்டு தினத்தில் வெளிவர அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஹேஷ்டேக்குகள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வரும் புத்தாண்டு தினத்தில் ’பீஸ்ட்’ படத்தின் சிங்கிள் பாடல் ப்ரோமோ வீடியோவும் ’வலிமை’ படத்தின் டிரைலரும் வெளியாகும் என்பதால் இந்த புத்தாண்டு அஜித் விஜய் ரசிகர்களுக்கு சிறப்பான புத்தாண்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.