வரலாற்றில் முதன் முறை - நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம்..!

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அண்மையில் மகாவம்சம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள மகாவம்சத்தின் பழமையான ஓலையின் மூலப் பிரதியை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, நாளை(01) பொதுமக்கள் இதனை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர அருங்காட்சியகம், ஜோர்ஜ் கீட்டின் ஓவியங்களின் தொகுப்பு மற்றும் பல்கலைக்கழகத்தின் 5,000 அரிய புத்தகங்களின் தொகுப்பினையும் பொதுமக்கள் பார்வையிட முடியும்.

பல்கலைக்கழகமொன்று இவ்வாறு பொதுமக்கள் பார்வைக்கான நாளொன்றை அறிவிப்பது இதுவே இலங்கையில் முதல் முறை என்று கூறப்படுகின்றது