மீண்டும் இன்று இந்தோனேசியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!


துருக்கி - சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டவண்ணம் உள்ளது.

அந்தவகையில், இந்தோனேசியாவில் மீண்டும் நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில், 97 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த பூகம்பம் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 05:02 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

குறித்த பூகம்பம் டோபெலோவிற்கு வடக்கே சுமார் 177 கிமீ (110 மைல்) தொலைவில் ஏற்பட்டதுடன், சுமார் 97 கிமீ (60 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது.

இதேவேளை, வடக்கு மலுகு மாகாணம் முழுவதும் லேசான, மிதமான நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

பூகம்பத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.