பால் புரைக்கேறி ஒரு மாத பெண் குழந்தை பரிதாப மரணம் : யாழில் சம்பவம்


யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இச் சம்பவம் நேற்று புதன்கிழமை  அதிகாலை (26) இடம்பெற்றுள்ளது.

குழந்தை அசைவற்றுக் கிடப்பதனை அவதானித்த பெற்றோர், குழந்தையை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மரணம் தொடர்பிலான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் பால் புரைக்கேறியமையால் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.