அரசியல் நோக்கத்தில் காய் நகர்த்தும் பணிப்பாளர்: வைத்தியர் அர்ச்சுனா வெளிகொணர்ந்த புதிய ஆதாரம்

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவிற்கு வழங்கப்பட்ட நியமனமானது வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரனவினாலேயே வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Dr. R. Archuna) குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் குறித்த நியமனமானது சட்டரீதியாக செல்லுபடி அற்றது என்றும் தான் இப்பொழுதும் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் என்றும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

சமன் பத்திரனவின் இந்த நடவடிக்கையானது மக்களை திசை திருப்பும் நோக்குடனும் அரசியல் நோக்கங்களுக்காகவே முன்னெடுக்கப்பட்டுகின்றது என வைத்தியர் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.