அடிகாயங்களுடன் ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்

கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் சடலம் ஒன்று இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.

புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தில் அடிகாயங்களும் காணப்படுவதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.