பிணை கைதிகளை விடுவிக்க பாலஸ்தீன குழு விதித்த நிபந்தனை

தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் கடந்த மாதம் 7ஆம் திகதி நடத்திய திடீர் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் உயிரிழந்தனர்.

 இந்த தாக்குதலின் போது இஸ்ரேலில் இருந்து சுமார் 240 பேரை காசாவில் உள்ள பாலஸ்தீனிய குழுக்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றன.

இவர்களில் பெரும்பாலானோர் ஹமாஸ் பிடியில் இருப்பதாக நம்பப்படுகிறது.

 இந்நிலையில் ஹமாஸ{டன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிடும் இஸ்லாமிக் ஜிகாத் என்ற சிறிய ஆயுதக்குழு தங்களிடம் 30 பிணைக் கைதிகள் இருப்பதாக ஏற்கெனவே தெரிவித்தது.

இந்நிலையில் இஸ்லாமிக் ஜிகாத் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வயோதிப பெண் ஒருவரையும் ஒரு சிறுவனையும் காணமுடிகிறது.

 “எங்கள் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் மனிதாபிமான அடிப்படையிலும் மருத்துவ காரணங்களுக்காகவும் இருவரையும் விடுவிக்க தயாராக இருக்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு அந்த வயோதி பெண் பேசுகிறால்,

அதில் , “எனக்கு குழந்தைகள் நினைவாகவே உள்ளது. நான் உங்களை அடுத்த வாரம் சந்திப்பேன் என நம்புகிறேன். நாங்கள் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறோம். நீங்களும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்” என்று கூறுகிறார்.

 பிணைக் கைதிகளை படம் பிடித்து ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள 3ஆவது வீடியோ இதுவாகும்.

 இவர்கள் இதுவரை 4 பிணைக் கைதிகளை விடுவித்துள்ளனர். இறுதியாக 85 வயது மற்றும் 79 வயதுடைய இரு வயோதிப பெண்கள் கடந்த மாதம் 23ஆம் திகதி இஸ்ரேல் திரும்பினர்.

இந்நிலையில் இஸ்லாமிக் ஜிகாத் வெளியிட்டுள்ள இந்த வீடியோ குறித்து இஸ்ரேல் அரசு இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இதேநேரம் காசாவில் பொதுமக்களுக்கு நேரும் அவலங்களுக்கு ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் தான் பொறுப்பாகும். இஸ்ரேல் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பாகாது. உலகத் தலைவர்கள் ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்குத் தான் கண்டனம் தெரிவிக்க வேண்டுமே தவிர எங்களுக்கு அல்ல இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.