திருமணம் செய்யாவிட்டால் பணி நீக்கம்! பெண் தேடி ஓடும் ஊழியர்கள்..!
உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருந்து வந்த சீனா, மக்கள் தொகையை குறைப்பதற்கான கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதனால் கடந்த சில ஆண்டுகளில் பிறப்பு விகிதம் குறைந்த அதே சமயம், எதிர்காலத்தில் சீனாவில் இளைஞர்களே இல்லாமல் போய்விடுவார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சீனா தற்போது அங்குள்ள இளைஞர்கள் காதலிப்பதையும், குழந்தை பெற்றுக் கோள்வதையும் அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சீனாவில் உள்ள நிறுவனங்கள் பலவும் காதலிப்பதை ஊக்குவிக்கின்றன. இந்நிலையில் சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திருமணம் செய்யாமல் இருந்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது.
28 முதல் 58 வயதுடைய நபர்கள் கண்டிப்பாக திருமணம் செய்திருக்க வேண்டும் என்றும், விவாகரத்து பெற்றவர்களாக இருந்தால் மறுமணம் செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஆனால் இது தனிநபர் உரிமையில் தலையிடும் விவகாரமாக இருப்பதாக பலத்தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.