400 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடும் குழந்தை! 70 மணி நேரமாக தொடரும் மீட்பு பணி

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் 8 வயது குழந்தையொன்று விழுந்து சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், இந்த குழந்தையை கிணற்றிலிருந்து மீட்கும் பணி சுமார் 3  நாட்களாக 70 மணி நேரமாக தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தை சுமார் 55 அடி உயரத்தில் சிக்கியிருக்கலாம் எனவும், குழந்தையின் மேல் சேறு படிந்துள்ளதால் குழந்தையின் நிலைமையை கண்டறிய முடியவில்லை எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), ஊர்க்காவல் படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் கடந்த மூன்று நாட்களாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவன் சிக்கியுள்ள கிணறு பகுதி கடினமான பாறையாக இருப்பதால் பள்ளம் வெட்டுவது மிகப்பெரிய சவாலாக உள்ளதாக பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆழ்துளை கிணற்றில் சி்க்கியுள்ள குழந்தை 55 அடி ஆழத்தில் உள்ளதால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவதாகவும்,  இருட்டை கண்டு சிறுவன் பயப்படாமல் இருக்க கிணற்றி்ல் ஒளி பாய்ச்சப்பட்டு வருவதாதவும் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறுவனின் உடல் நிலையை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே கண்காணித்து வருகின்றனர்.  

இதற்கிடையில், சிறுவனின் பள்ளி தோழர்கள், அவனது நலனுக்காக காயத்ரி மந்திரத்தை ஜபித்து வருகின்றனர்.

டிசம்பர் 6-ஆம் திகதி மாலை 5 மணியளவில் பண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த, ஒரு மணி நேரத்தில் மீட்புப் பணி தொடங்கி தற்போது வரை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.