இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பேருந்தும் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்ததுடன், விபத்துக்குப் பிறகு கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் காயமடைந்த சுமார் 23 பேர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்பதுடன், விபத்து குறித்து எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட டிப்பர் வண்டி மீது, லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
குடாகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறி, நிறுத்தி வைக்கப்பட்ட டிப்பர் வண்டியில் மோதியுள்ளதோடு, லொறியை செலுத்திய சாரதி மது போதையில் லொறியை செலுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் மது போதையில் லொறியை செலுத்திய சாரதி விபத்தினை ஏற்படுத்தும் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.