யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தனிமையிலிருந்த பெண் மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரயவந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு குடத்தனை மேற்கு பகுதியை சேர்ந்த 68 வயதுடைய குறித்தப் பெண் நேற்று அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்த வேளை கதவை உடைத்து முகமூடி அணிந்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
அதன் பின்னர், அங்கிருந்த தங்க தோடு, தாலி ஆகியவற்றையும் கொள்ளையிட்டதுடன் அவரிடம் இருந்த பத்தாயிரம் ரூபா பணத்தையும் பறித்தெடுத்துள்ளனர்.

மேலும் அவரது காணிகளின் உறுதி பத்திரங்களையும் கோரியுள்ளனர். குறிப்பாக அண்மையில் கொள்வனவு செய்த காணியின் உறுதிப் பத்திரத்தையும் கோரியுள்ளனர்.
அப்போது அச்சத்தில் குறித்த பெண் உறுதிப் பத்திரத்தை காண்பிக்க அதனை தீயிட்டு கொழுத்தியதுடன் அவரது பாவனை புடவைகளையும் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த பெண் அண்மையில் கொள்வனவு செய்த காணியில் புதிதாக வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பணிகள் இடம் பெறுவதாகவும், அதற்கான பணம் எங்கே இருக்கிறது என்றும் கேட்டு மிரட்டியுள்ளனர்.
புதிதாக கொள்வனவு செய்த காணியில் இரவுக் காவலிற்க்காக தங்கியிருந்த கணவர் அதிகாலை 5 மணிபோல் தனது வீட்டிற்க்கு வந்தபோது தனது மனைவி இரத்த காயங்களுடன் கிடந்ததை கண்டு உடனடியாக அயலவர் உதவியுடன் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.