யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் 06 பேரை நேற்றைய தினம் திங்கட்கிழமை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியை சேர்ந்த ஜெகதாஸ் (வயது 54) என்பவர் தனது 19 வயது காதலியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது ஊரை விட்டு வெளியேறி
இருந்தார்.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதி அளித்ததால் , இருவரும் ஊர் திரும்பியுள்ளனர்.
அவ்வேளை ஊரவர்கள் குடும்பஸ்தர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.அதனால் அவர் மயக்கமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் 06 பேரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            