யூடியூப் காணொளி பார்த்து 15 வயது சிறுமி செய்த செயல் - அதிர்ச்சியளித்த சம்பவம்!


15 வயது சிறுமி ஒருவர் யூடியூப் மூலம் காணொளி பார்த்து குழந்தையொன்றை பிரசவித்து, பின்னர் அந்த குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையொன்றில் தரம் 9 இல் கற்றுவரும் குறித்த சிறுமி சமூகவலைத்தளம் மூலம் இளைஞர் ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

பின்னர் இருவரும் நேரில் சந்தித்த சந்தர்ப்பமொன்றில் அந்த இளைஞரால் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

நடத்தை மாற்றத்தை அவதானித்த தாய் சிறுமியை வினவியபோது, தனக்கு சில உடல்நல பிரச்சனை இருப்பதாக சிறுமி கூறியுள்ளார்.

இந்தநிலையில், சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயம் யூடியூப் மூலம் காணொளிகளை பார்த்து தாமாகவே குழந்தையை பிரசவித்துள்ளார்.

சிறிது நேரத்தில் குழந்தை அழுதுள்ளதால், அழுகை சத்தம் வெளியே கேட்டால் விசயம் தெரிந்துவிடும் என எண்ணிய குறித்த சிறுமி அக்குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

வீடு திரும்பிய தாயார் வீட்டில் இரத்தக் கரை காணப்பட்டதையடுத்து சிறுமியிடம் கடுமையாக விசாரித்தபோது சிறுமி உண்மையை கூறியுள்ளார்.

சிறுமியின் தாயார் காவல்துறைக்கு தகவல் வழங்கியதையடுத்து, பிரசவித்த குழந்தை மீட்கப்பட்டதுடன், சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.