8000 கோடி ரூபாய் லஞ்சம் - எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் புதிய திருப்பம்..!



எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மீதான வழக்கு தாக்கல் நடவடிக்கைளை தடுப்பதற்காக 250 மில்லியன் டொலரை (சுமார் 8000 கோடி ரூபா ) இலஞ்சமாக சாமர குணசேகர என்பவரே பெற்றுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் சாட்சியம் கிடைக்கவில்லை.எனவே காவல்துறையினர் தான் உண்மையை கண்டுப்பிடிக்க வேண்டும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்கான நஷ்டஈடு தொடர்பான வழக்கு தோல்வியடைந்தால் அதன் பொறுப்பை சுற்றாடல் தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவே ஏற்க வேண்டும் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.