கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள 700 பேர் - போலி ஆவணத்தினால் ஏற்பட்ட கதி!


போலி ஆவணங்களை சமர்ப்பித்து கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்ற 700 இந்திய மாணவர்களுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு சென்ற மாணவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூலமாக சென்றுள்ளன என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைகளுக்காக ஒரு மாணவரிடம் ரூ.16 லட்சத்திற்கும் அதிகமாக வாங்கியதாகவும் தகவல்கள் வருகின்றது. மாணவர்கள் படிப்பு விசாவில் 2018-19 இல் கனடாவுக்குச் சென்றிருந்தனர்.

ஆனால் அவர்கள் சமீபத்தில் வட அமெரிக்க நாட்டில் நிரந்தர வதிவிடத்திற்கு (PR) விண்ணப்பித்த பிறகு தான் இந்த மோசடி தெரிய வந்துள்ளது.

அவர்களது ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ​​கனேடிய அதிகாரிகள் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட 'சேர்க்கை சலுகை கடிதம்' (admission offer letter) போலியானவை என்று கண்டறிந்தார்கள்.

இதனையடுத்து, கனேடிய எல்லைப் பாதுகாப்பு நிலையம் அவர்களுக்கு நாடு கடத்தல் கடிதங்களை அனுப்பியுள்ளது.

இது தொடர்பில் கவல்த்துறையினர் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் இன்னும் சரிபார்த்து வருகிறோம், எங்களுக்கு ஏதேனும் புகார் வந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளனர்.