7.5 கோடி ரூபா சொத்து.. : பதற்றத்தில் நீதிமன்றில் தடுமாறிய வீரவன்ச.. நீதிமன்றம் எடுத்த தீர்மானம்



75 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களை எவ்வாறு ஈட்டினார் என்பதை வெளிப்படுத்தத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் விமல்வீரவங்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிய விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதி நடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
விமல் வீரவன்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி,சமர்ப்பணங்களை முன்வைத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய நேரம் தேவைப்படுவதாக நீதிமன்றத்தில் கோரினார்.

இதைக் கருத்தில் கொண்டு, சாட்சி விசாரணையை ஒக்டோபர் 22 ஆம் திகதி அழைக்க உத்தரவிடப்பட்டது.
இன்று நீதிமன்றத்தில் முன்னிலையான சாட்சியாளர்களை அன்றைய தினம் முன்னிலையாகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அமைச்சராக பணியாற்றிய போது விமல் வீரவங்ச ஈட்டிய சுமார் ரூ.75 மில்லியனுக்கு அதிகமான சொத்துக்கள் எவ்வாறு உழைத்தார் என்பதை வெளியிடத் தவறியமைக்காக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.