பாதுகாப்பு உள்ளிட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து : முழுமையான தகவல் இதோ

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. 
 
ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. 
 
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 
 
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.