குஜராத் தொங்குபால விபத்து - சகோதரர்கள் மூவரும் பலியான சோகம்


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சகோதரர்கள் மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் சிராக் முச்சடியா, 20, மற்றும் அவரது சகோதரர்கள், தர்மிக், 17, மற்றும் சேத்தன், 15, ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் அவர்கள் தங்கள் தாயாரிடம் தொங்கு பாலத்திற்கு செல்வதாக கூறிச் சென்றனர்.

நாங்கள் எங்கள் எல்லா மகன்களையும் இழந்துவிட்டோம், எங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம்," என்கிறார் தாயாரான காண்டபென். "இப்போது என்ன இருக்கிறது? நானும் என் கணவரும் தனியாக இருக்கிறோம்."எனவும் அவர் பெரும் துக்கத்துடன் தெரிவித்தார்.

20 வயதான சிராக் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அவனது சம்பாத்தியம், அவனது தந்தை ராஜேஷ் சாரதியாக வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற உதவியது.

டிசம்பர் 14 அன்று தர்மிக்கிற்கு 18 வயது ஆகியிருக்கும். அவர் வேலை தேட ஆரம்பித்தார். "அவர் மிகவும் குறும்புக்காரர். நாங்கள் ஒன்றாக மிகவும் வேடிக்கையாக இருந்தோம். இப்போது அவர்கள் அனைவரும் போய்விட்டார்கள்" என்று அவரது தந்தை கூறுகிறார்.

சேத்தன் இளையவன், பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். ராஜேஷ் அவரை "படிப்பில் மாஸ்டர்" என்று விவரிக்கிறார்.

"எனது மகன்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" என்கிறார் காந்தாபென். "அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் வாட வேண்டும். அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்."என தெரிவித்தார்.

தந்தையான ராஜேஷ் "எங்களுக்கு பதில்கள் வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும்."என்கிறார். இந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.