கெர்சன் நகரில் உக்ரைன் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு

உக்ரைன் ரஷ்யா  மோதல் தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கியும்  இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.

இந்த சண்டையின் போது தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றின.

இந்த நகரை மீட்க உக்ரைன் வீரர்கள் தொடர்ந்தும் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள கெர்சன் சாப்சின்கா வேலைவாய்ப்பு மையத்தில் உக்ரைன் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது.

இதில் 6 பேர் உயிர் இழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.